பஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்: ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஈரோடு பஸ் நிலையம் மினி பஸ் ரேக் கீழ்ப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இன்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. முதியவர் கொண்டு வந்திருந்த பையில் ஒரு மருந்து சீட்டு இருந்தது. அதில் அவரது பெயர் விஜய் என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. எனவே தற்கொலை செய்துகொண்ட முதியவர் கோவை சேர்ந்தவரா? எனத் தெரியவில்லை.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.