ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு துவக்க விழா
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் துவக்க விழா நடந்தது.
பள்ளிக் கல்வித்துறையின் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலை பயணத்தின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து கலைக் குழுவினர் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறையினர் மற்றும் விழிப்புணர்வு கலைக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு 12 மாவட்டங்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டத்தினை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கான 200 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது.