ஈரோட்டில் மரம் முறிந்து விழுந்ததில் சாயப்படறை காவலாளி பலி
ஈரோட்டில் எதிர்பாராத விதமாக மரம் முறிந்து விழுந்ததில் சாயப்படறை நிறுவனத்தின் காவலாளி பலியானார்.;
ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வாட்டர் ஆபிஸ் சாலையில் சோழா பிராசசிங் என்ற சாய பட்டறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் காவலாளியாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்றி இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி கருப்புசாமி இரவு உணவு சாப்பிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக நிறுவனத்தின் முன்பாக இருந்த கல்யாண முருங்கை மரம் முறிந்து கருப்புசாமி மேல் விழந்தது. இதில் காவலாளி கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இன்று காலை கருப்புசாமி மரத்திற்கு இடையே சிக்கி உயிரிழந்திருப்பதை கண்ட அப்பகுதியினர் கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரம் முறிந்து விழந்து காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.