ஈரோடு மாநகராட்சியில் வென்ற திமுக - கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அமைச்சரிடம் ஆசி

ஈரோடு மாநகராட்சியில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தமிழக அமைச்சரிடம் ஆசி பெற்றனர்

Update: 2022-02-22 16:15 GMT

ஈரோடு மாநகராட்சியில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் ஆசி பெற்றனர்

ஈரோடு மாநகராட்சியில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தமிழக அமைச்சரிடம் ஆசி பெற்றனர்.

ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பாக நாற்பத்தி எட்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இவர்கள் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சருமான சு. முத்துசாமியை சந்தித்து சால்வை அணிவித்து சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News