ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் 60வார்டுகள் உள்ளது.இதற்கான வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவானது வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் 51வது வார்டில் திமுக சார்பில் விஜயலட்சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவருடன் 51வது வார்டில் திமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு மற்றும் வாபஸ் பெற்றதை அடுத்து திமுக வேட்பாளர் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதற்கான சான்றிதழை வேட்பாளர் விஜயலட்சுமியிடம் வழங்கினார்.