ஈரோட்டில் மாவட்டத்தில் 677 மி.மீ., மழையளவு பதிவு
ஈரோட்டில் அதிகபட்சமாக கோபியில் 110மி.மீ., மழைப்பொழிவு இருந்தது. மாவட்டத்தில் மொத்த மழையளவு 677 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. நமாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் தூரல் மழை பொழிவு இருந்தது. இதில் பெருந்துறையில் 15மி.மீ., பவானியில் 32மி.மீ., கோபியில் 110மி.மீ., சத்தியமங்கலத்தில் 35மி.மீ., பவானிசாகரில் 7.8மி.மீ., தாளவாடியில் 12மி.மீ., நம்பியூரில் 84மி.மீ., சென்னிமலையில் 2மி.மீ., கவுந்தப்பாடியில் 46.2மி.மீ., எலந்தன்குட்டைமேட்டில்81.6மி.மீ., அம்மாபேட்டையில் 66.4மி.மீ., கொடிவேரியில் 42மி.மீ., குண்டேரிப்பள்ளத்தில் 102 மி.மீ., வரட்டுப்பள்ளத்தில் 41மி.மீ., என மாவட்டத்தில் மொத்த மழையளவாக 677 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையளவாக 39.82மி.மீ. பதிவாகி உள்ளது.