ஈரோடு எஸ்பி அலுவலக ஆய்வு கூட்டத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி பங்கேற்பு
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆய்வு கூட்டத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி பங்கேற்றார்.;
டி.ஐ.ஜி முத்துசாமி இன்று காலை ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலகங்களை பார்வையிட்டார். பின்னர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஏ.டி.எஸ்.பி.க்கள், கணகேஸ்வரி, பாலாஜி, ஜானகிராமன், டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் பலர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.