வாட் வரியை குறைக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை மீதான வாட் வரியை நீக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஈரோடு மாவட்ட பாஜகவினர் சார்பில் வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிரணி மாவட்ட தலைவி புனிதம் ஐயப்பன் தலைமை ஏற்றனர். தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், வடக்கு மாவட்ட தலைவர் அஜித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டார். மகளிரணி மாநில துணைத் தலைவி சிவசங்கரி, வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சசி தயாளன், வடக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவி கோகிலா, மாவட்ட மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டனர்.