ஈராேடு மாவட்டத்தில் இன்றைய காெராேனா தாெற்று பாதிப்பு நிலவரம்

ஈரோட்டில் மேலும் 69 பேருக்கு தொற்று. ரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1, 272 ஆக குறைந்தது.;

Update: 2022-02-18 10:45 GMT

மேலும் 69 பேருக்கு தொற்று ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1, 272 ஆக குறைந்தது

மேலும் 69 பேருக்கு தொற்று ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1, 272 ஆக குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3 - ம் அலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் திடீரென தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பொழுது மாநகர் பகுதியில் தின சரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அதன் பின்னர் கிராமப்புற பகுதிகளில் பாதிப்பு வேகமாக பரவியது. தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மாநகர பகுதியில் தினசரி பாதிப்பு 5 முதல் 6 வரை மட்டுமே பதிவாகி வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 267ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 234 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 734 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 1,272 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைப்போல் மாவட்டம் முழுவதும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வந்த கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் ஈரோடு மாநகர பகுதியில் பஸ் நிலையம் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்த ஸ்கிரீனிங் மையம் பாதிப்பு குறைவு காரணமாக மூடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News