சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம்: ஈரோடு ஆட்சியர் அழைப்பு

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-08 13:00 GMT

இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை:  நடப்பு சம்பா பருவத்தில் நெல்-2 பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பயிர்க்காப்பீடு  திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். நெல்-2 பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.528.00 செலுத்த வேண்டும்.

வருகின்ற நவம்பர் 15, 2021 ஆம் தேதி,  சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். தற்போது வடகிழக்குப் பருவ மழை திவிரமடைந்துள்ள நிலையில், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்,  குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து,  தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News