ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், 1700 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-11 06:45 GMT

ஈரோடு மாநகராட்சியில் பணியில், தற்காலிகமாக சுமார் 1700பேர் வரை பணியாற்றுகிறார்கள். ஈரோடு மாநகராட்சி சார்பில் தற்காலிக ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ 650 அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், தற்போது, இப்பணிகள் தனியார் வசம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனம், தற்காலிக மற்றும் தூய்மைப்பணியாளர்களின் கூலியை குறைத்துள்ளது. இதனால் கவலையடைந்த தொழிலாளர்கள், தங்களுக்கு கூலியை உயர்த்திக் தரக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News