கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி: விற்பனையை துவக்கி வைத்த கலெக்டர்

வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை மையத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.;

Update: 2021-10-20 13:00 GMT

கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த கலெக்டர்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் இன்று தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நிலையத்தை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸின் தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் மற்றும் நிர்வாகக் குழு இயக்குனர் எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News