சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

சீமானை கைது செய்ய கோரி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2021-10-13 08:00 GMT

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், சீமானை கைது செய்யக்கோரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம். ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் ஈ.ஆர்.எஸ். பிரகாஷ், வினோத் மாரியப்பா ஆகியோர் முன்னிலையில்,  ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது. அதில், நாம் தமிழர் கட்சியை சார்ந்த சீமான் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களையும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் அவதூறாக பேசி வருகிறார்.  காங்கிரஸ்காரர்கள் ஒழுங்காக இல்லாமல் எங்களை விமர்சித்துக் கொண்டு பேசினால் உங்களுக்கும் இதேகதி என்பது போல கொலை மிரட்டும் தொணியில் பேசி வருகிறார்.  அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மாவட்ட துணைத்தலைவர்கள் எம் ஆர் அரவிந்த் தாஸ், கே.எஸ்.செல்வம், அம்மன் மாதேஸ்வரன், முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம், பாஸ்கர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News