ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-11 00:30 GMT

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டமும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்றோருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் உதயகுமரன் தலைமை தாங்கினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொதுச்செயலாளர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் முன்னாள் மாநில துணைத் தலைவரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான நல்லசாமி,  மாநில துணைத்தலைவர்  முத்துக்குமார்,  முன்னாள் மாவட்ட தலைவர் பி எஸ் சச்சிதானந்தம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச்செயலாளர்  கே பி செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே எஸ் சந்திரமோகன், என்.கே ஜவகர் பாபு மற்றும் அனைத்து வட்டார நகர தலைவர்கள் முன்னணி அமைப்பின் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News