நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-10-26 13:45 GMT

திமுக சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏழை கர்ப்பிணி  பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்ததையடுத்து ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் மைவிழி முருகேசன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், முங்குமமிட்டு, வளையல் அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News