ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டதிற்கான 104 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

Update: 2022-01-10 07:45 GMT

ஈரோடு மாவட்டதிற்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பபுறம் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட தேர்தல் அலுவலக கட்டிடம், பழுதான அரசுப் பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து சோலார் மொடக்குறிச்சி உட்பட்ட புறநகர் பேருந்து நிலையங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

1954ல் தந்தை பெரியாரால் அடிக்கல் நாட்டப்பட்ட சிக்கய்ய நாயக்கர் கல்லூரி செயல்பட்டு வந்தது. இதனை அரசுக் கல்லூரியாக மாற்ற கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்றுஅரசு கல்லூரியாக மாற்றும் உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஈரோட்டில் நடந்த விழாவில் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிகழ்வில் தமிழகவீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கேபிள் டிவி நிறுவனத் தலைவர் சிவகுமார், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News