ஈரோட்டில் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: ஏற்பாடுகள் தயார்
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடுகள் தயார்.;
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடுகள் தயார்.
ஈரோடு மாநகராட்சி தேர்தலில் தலா, பத்து வார்டு வீதம், ஆறு இடங்களில் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 60 வார்டுகள் உள்ளன. இதில் பெண் (பொது) வார்டாக, 1, 5, 7, 14, 15, 17, 22, 23, 27, 29, 30, 32, 33, 34, 35, 38, 39, 42, 43, 45, 46, 49, 50, 51, 52, 54 ஆகிய, 26 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கு, 2, 6, 44 ஆகிய மூன்று வார்டுகளும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, 4, 37, 53, 55 ஆகிய நான்கு வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வார்டுகளில் ஆண், பெண் என எந்த வகுப்பினரும் போட்டியிடலாம். பழங்குடியினர் பொது மற்றும் பெண்களுக்கு என வார்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்காக இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், விரைவாக வேட்பு மனுவை பெறவும் வசதியாக, தலா, பத்து வார்டுகளுக்கு ஒரு இடம் என ஆறு இடங்களில் வேட்பு மனுக்கள் பெற உள்ளனர்.
இதன்படி, 1, 2, 3, 4, 6, 7, 13, 15, 17, 23 ஆகிய பத்து வார்டுகளுக்கு போட்டியிடுவோர், ஆர்.என்.புதுாரில் உள்ள ஒன்றாம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் (பணியாளர்கள்) குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல, 5, 8, 9, 11, 12, 14, 16, 24, 25, 26 ஆகிய பத்து வார்டுகளுக்கு, வீரப்பன்சத்திரம் பழைய ஒன்றாம் மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, உதவி ஆணையர் (கணக்குகள்) ஆர்.விஜயா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார்.
வார்டுகள், 18, 20, 21, 22, 27, 28, 29, 35, 36, 37 ஆகிய பத்துக்கும், பெரியசேமூர் பகுதியில் உள்ள இரண்டாம் மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, நான்காம் மண்டல உதவி பொறியாளர் ஆனந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வார்டுகள், 10, 19, 30, 31, 32, 33, 47, 48, 49, 50 ஆகிய பத்துக்கும், சூரம்பட்டி மூன்றாம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக மூன்றாம் மண்டல உதவி பொறியாளர் கோபிநாத், மனுக்களை பெறுகிறார்.
வார்டுகள், 34, 38, 39, 40, 41, 42, 44, 45, 46, 51 ஆகிய பத்துக்கும், காசிபாளையம் நான்காம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, நான்காம் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி ஆணையர் சண்முகவடிவு செயல்படுவார்.
வார்டுகள், 43, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய பத்துக்கும், மீனாட்சிசுந்தரனார் சாலை மாநகராட்சி மைய அலுவலகம், பழைய கட்டடம், தரைத்தளம் முதல் அறையில் மனுத்தாக்கல் செய்யலாம். இங்கு, இரண்டாம் மண்டல உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார்.