ஈரோடுமாவட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொளியில் பரப்புரை
ஈரோடு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் காணொளிமூலம் தேர்தல் பரப்புரை செய்தார்
ஈரோடு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் காணொளி மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்து ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், நகராட்சியில் உள்ள 102 வார்டுகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் உள்ள 630 வார்டு உறுப்பினர்களுக்காக போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 84 இடங்களிலும் வடக்கு மாவட்டத்தில் 30 இடங்கள் என மொத்தம் 114 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.மேலும் இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் சிறப்புரை ஆற்றினார் தொடர்ந்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியும் அதனை தொடர்ந்து அந்தியூர் செல்வராஜ் அவர்களும் பேசினர்.பின்னர் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார் இதில் ஈரோடு மாவட்டத்திற்கு செய்ய திட்டங்கள் மற்றும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலநிலையை எடுத்து கூறினார்.மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியை பெறவேண்டும் என்றார்.நிறைவாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நன்றியுரை ஆற்றினார்