ஈரோட்டில் வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
ஈரோடு நேரு வீதியில் வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
ஈரோடு நேரு வீதியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 9 வாலிபர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பாஸ்ட்பூட், பேக்கரி, காபி ஷாப் போன்றவற்றில் வேலை பார்த்து வருகின்றனர். காலையில் வேலைக்கு சென்றால் இரவுதான் வீட்டிற்கு வருவார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம் ரூ.62 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பீகாரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்ற வடமாநில வாலிபர் டவுன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.