சிறுபான்மையினர் நல திட்ட உதவிகளை பெற ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பெறப்படும் நலத்திட்ட உதவிகளுக்கு ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2021-12-02 05:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி.

2021 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை புதிய அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப்பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டங்களுக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளின் தற்போதைய ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/-லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே, தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் அரசின் நலத்திட்டங்களான மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப்பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5ம் தளத்தில் பெறுவதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News