தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் -ஈரோடு ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி

Update: 2021-11-28 15:15 GMT

தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர்

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) 30.11.2021 க்குள் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை எனவும் ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கலாம் எனவும் அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையதளத்தில் 30.11.2021 க்குள் புதுப்பிக்க அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News