ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-17 05:45 GMT

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்திட கோரி ஈரோடு மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன் சத்திரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகைளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி வீரப்பன் சத்திரத்தில் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக வினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக வின் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலர் கருப்பண்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு,மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News