முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-02-28 07:30 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் முன்னாள்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள், ஆளும் திமுக அரசின் விரோதப் போக்கினைக் கண்டித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதானதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வீரப்பன்சத்திரம் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News