ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-01-03 11:00 GMT

கைது செய்யப்பட்ட வினோத்குமார்.

ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் வீட்டுமனை வழங்குவதாக கூறி, ரூ.2 கோடி வரை பணம் வசூலித்து, சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய அதிமுக பிரமுகர்கள் மோசடி செய்ததாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் மீது ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் வைரவேல் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேலும், 10 பேர் தலைமறைவாக இருந்தனர்.

இதனையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகர் பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

Tags:    

Similar News