மக்கள் பிரச்சனையில் அதிமுக எப்போதும் முன் நிற்கும்: எஸ்.பி.வேலுமணி

மக்களின் பிரச்சனைகளுக்கு முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-13 09:30 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி.

அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் அக்கட்சியினரிடம் பெறப்பட்டு வருகிறது. இதற்கென மாவட்டம் வாரியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரிடம் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, 1989ம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளதாகவும், எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்த அவர், எப்போதும் மக்களின் பிரச்சனைகளுக்கு முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News