ஏசி மெக்கானிக் மனமுடைந்து தற்கொலை
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அசோக் கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே ரோட்டை சேர்ந்த நாச்சிமுத்து மகன் அசோக் ( 35 ). ஏ.சி. மெக்கானிக். கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பூர் நத்தகாடையூரை சேர்ந்த விமலாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் அசோக்குடன் வாழ பிடிக்காமல் தாய் வீட்டுக்கு விமலா சென்று விட்டார். தன்னுடன் வாழ வருமாறு பலமுறை அசோக் அழைத்தார். ஆனால் விமலா வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்து நேற்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அசோக் கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கபபட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.