ஈரோடு ரயில்வே காலனியில் பிடிபட்ட 6 அடி நீள நாக பாம்பு
ஈரோடு ரயில்வே காலனியில் இன்று 6 அடி நீளமுள்ள நாக பாம்பு பிடிபட்டது.
ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள இன்ஜின் கூர்செட் பகுதியில் இரும்பு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த இரும்பு பொருட்களை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. 5 வடமாநில வாலிபர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரயில்வே என்ஜினீயர் அருண்சங்கீத் இந்த பணியை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது சின்ன பாம்பு ஒன்று நெளிந்து செல்வதை கண்டார். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரும்பு பொருட்களை அகற்றினார். அப்போது சுமார் 6 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு இருந்ததை கண்டுபிடித்தார். இந்த இடத்தில் நாக பாம்பை லாவகமாக பிடித்து தனது கவரில் போட்டு அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.