மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 295 வாகனங்கள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 295 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.;
எஸ்பி அலுவலகம்.
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்களை வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18 ம்தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள் இருசக்கர வாகனத்திற்கு 5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கும் 10ஆயிரம் வரை முன்பணம் கட்டாயம் செலுத்தவேண்டும். 17 ம்தேதி காலை 10 மணிமுதல் 5 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம், ஈரோடு மாவட்டம் தொலைபேசி எண்: 9442265651, 9942402732, 9498174811, 9976057118 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.