பெற்றோர் கண்டித்தால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட கூடாது என பெற்றோர் கண்டித்தால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2021-10-08 17:30 GMT

தற்கொலை செய்து கொண்ட மோகன்ராஜ்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ராஜாஜிபுரத்தில் வசிக்கும் மூர்த்தி என்பவரது மகன் மோகன்ராஜ். இந்த மாணவன் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மோகன்ராஜ் தனது செல்போனில் ஆன்லைன் கேம் பகல் இரவு என பாராமல் எந்நேரமும் விளையாடியதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை கண்டித்து வந்த மோகன்ராஜின் தந்தை மூர்த்தி கடந்த 3 - நாட்களுக்கு முன்பு செல்போனை பிடிங்கி வைத்த கொண்டுள்ளார். இதனால் கடந்த மூன்று நாட்களாகவே மோகன்ராஜ் யாரிடமும் பேசமால் இருந்ததுடன், மனம் சோர்ந்து விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இதனையெடுத்து இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மோகன்ராஜின் தந்தை மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மூர்த்திக்கு வீட்டுக்கு வந்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோகன்ராஜின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News