ஈரோடு மாவட்டத்தில் வரும் 20 & 21 ம் தேதி 10வது கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 20 & 21 ஆகிய தேதிகளில் 10வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் 20.11.2021 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் மற்றும் 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையிலும் இரு நாட்களில் 10வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 800 மையங்களில் 1,50,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் (கோவிட் ஷீல்ட் -84 நாட்கள், கோவேக்ஸின் - 28 நாட்கள் நிறைவடைந்திருப்பின்) இரண்டாவது தவணை தடுப்பூசியினை இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் செலுத்திக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.