அதிமுக 50வது ஆண்டு பொன்விழா: ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மரியாதை

அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை...*;

Update: 2021-10-17 04:15 GMT

அதிமுகவின் 50வது ஆண்டுவிழாவை முன்னிட்டு,  ஈரோடு மாநகர் மாவட்ட சார்பில் , பன்னீர்செல்வம் பூங்காவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுகவின் 50வது  ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஈரோடு மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றினர்.

அதை தொடர்ந்து, பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். அதனை தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள,  மறைந்த முதல்வர்கள் டாக்டர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைக்கு,  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News