வீதிதோறும் காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
வீதிதோறும் காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.;
ஈரோடு மாநகர காங்கிரஸ் கமிட்டி மூன்றாம் மண்டலத்தில் முதல் முறையாக வீதிதோறும் காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் இ.பி. ரவி முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திராவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வம் வரவேற்றார். தமிழக மாநில செயலாளர் . வழக்கறிஞர் பிரிவு சி.எம். ராஜேந்திரன் முன்னிலையில் ஈரோடு சிறுபான்மை துறை மாநகர தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மாநகர ஊடகப் பிரிவு தலைவர் ஹர்ஷித், சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என். பாஷா, தமிழக காங்கிரஸ் எஸ். சி. பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர எஸ். சி. பிரிவு தலைவர் சின்னசாமி, ஈரோடு மாநகர நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, மண்டல தலைவர் விஜய் பாஸ்கர், சங்கு நகர் அசோக், மாநகர துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாநகர நிர்வாகி கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட் உட்பட அடையாள அட்டை பெறுவதற்காக நூற்றுக்கணக்கில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.