ஈரோடு புத்தகத் திருவிழா;முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் இன்று துவக்கம்

Book Fair 2022 - ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-08-05 02:15 GMT

சிஎன்சி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஈரோடு புத்தகத் திருவிழா - 2022 .

Book Fair 2022 - மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் 18வது புத்தகத் திருவிழா இன்று (5ஆம் தேதி) ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் தொடங்க உள்ளது.

வரும் 16ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இத்திருவிழா நடைபெற உள்ளது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இக்கண்காட்சியில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கண்காட்சி அரங்குகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News