சென்னை மக்களுக்கு ஈரோடு பாஜக.,வினர் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.;
சென்னை தொடர் கன மழை காரணமாக பெரும்பாலான மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து தற்போது வரை வடியாமல் உள்ளது.
இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போர்வைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். பி. பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், சென்னிமலை ஒன்றிய தலைவர ஞானவேல் நெசவான் பிரிவு தலைவர் மூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.