ஈரோடு: மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருட்டு
சோலார் அருகே மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.;
ஈரோடு-கரூர் பைபாஸ் ரோடு, இராணியன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சரோஜா (வயது 63). இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் உணவகத்திற்கு உணவு செல்வதற்காக சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரோஜாவை பின் தொடர்ந்துள்ளனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் தலைக்கு குல்லா அணிந்திருந்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.