அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-14 12:15 GMT

அந்தியூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில், இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட துணை செயலாளர் சேதுபதிமுன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அந்தியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டும், அந்தியூரில் காமராஜர் மற்றும் சி.பா.ஆதித்தனார் சிலையை நிறுவ வேண்டும், பட்லூர் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும், மேட்டூர் உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ராசாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News