ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் இன்று (ஏப்ரல் 11) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.;

Update: 2025-04-11 09:50 GMT

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் இன்று (ஏப்ரல் 11) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சமத்துவ நாள் உறுதிமொழியை வசித்து ஏற்றுக் கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, வணிகவரி ஈரோடு கோட்ட இணை ஆணையர் (மாவ) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) குலால் யோகேஷ் விலாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது) உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News