விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம். இந்த வனச்சரகதுக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்(30). இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் லோகேஸின் தோட்டத்துக்குள் புகுந்து 40 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கி சேதம் செய்தது. மேலும் 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும்,தேக்கு மரங்களையும் பிடுங்கி சேதம் செய்தன.
இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கே முகாமிட்டு தென்னை மரங்களை சேதம் செய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது" யானைகள் சேதம் செய்த தென்னை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி ஆழமான அகழி தோண்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.