ஈரோடு மாவட்டத்தில் 2 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் 'கட்'

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக 2 ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-10 12:00 GMT

பைல் படம்.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிதும், விற்பனை செய்வதும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு அடுத்த வெண்டிபாளையம், பெருந்துறை அருகே துடுப்பதி பகுதியில் இயங்கி வந்த 2 பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், 2 ஆலைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதைதொடர்ந்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில், 2 ஆலைகளின் மின் இணைப்பினை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News