கோபிசெட்டிபாளையம் நகராட்சி, போலீஸ் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

கோபி நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-29 06:00 GMT

கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் போதும், பிரச்சாரத்தின் போதும் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று கோபி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து கோபியில் தனியார் மண்டபத்தில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், கோபி சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் முன்னிலையில் நகராட்சி தேர்தல் அலுவலர்கள் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, தேமுதிக, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News