ஈரோட்டில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைப்பயணம்

ஈரோட்டில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணா்வு நடைப்பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.;

Update: 2024-04-06 06:30 GMT

ஈரோடு சம்பத்நகரில் வாக்காளர் விழிப்புணர்வு நடைப்பயணத்தினை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணீஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா உட்பட பலர் உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத் நகர் நசியனூர் சாலை சந்திப்பு பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி) ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணீஷ் ஆகியோர் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நடைப்பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 2024ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி) ஸ்வீப் கண்காணிப்பு அலுவலர்களுடனான மணீஷ் ஆகியோர் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நடைப்பயணத்தினை துவக்கி வைத்தனர்.

இந்த நடைப்பயணமானது, ஈரோடு சம்பத்நகரில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெருந்துறை சாலை, அரசு பொது மருத்துவமனை சந்திப்பு, சத்தி ரோடு வழியாக பேருந்து நிலையம் ஸ்வஸ்திக் கார்னர் வரை சென்று நசியனூர் சாலை வழியாக மீண்டும் சம்பத் நகர் வந்தடைந்தது.

ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்காமல் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் ஏப்ரல் 19 அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவ, மாணவியர்கள் சென்றனர்.

இந்நடைப்பயணம் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கொண்டனர்.

Tags:    

Similar News