கவுந்தப்பாடியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: முதியவர் பலி
கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). நேற்று இவர் மொபட்டில் கவுந்தப்பாடி நால்ரோடு வழியாக ரோட்டை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த பைக் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செங்கோட்டையன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.