சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி
ஈரோடு வைராபாளையம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி.;
ஈரோடு வைராபாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). இவர் நேற்று தனது தோட்டத்திற்கு சென்று விட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வைராபாளையம் வாட்டார் ஆபீஸ் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக தண்ணீர் டேங்குடன் வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மாரிமுத்து மீது மோதியது. டிராக்டரின் முன்பக்க டயர் மாரிமுத்துவின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.