பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-20 06:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சன்னியாசிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரன்.முதியவரான இவர் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டிற்கு வீரன் இல்லாத நிலையில், நேற்று அதே பகுதியில் விவசாய தோட்ட கிணற்றில் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை கைப்பற்றி பவானி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பவானி போலீசார் உயிரிழந்த முதியவர் வீரன் சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News