பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி

பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;

Update: 2021-12-15 11:30 GMT

பைல் படம்.

பெருந்துறையை அடுத்துள்ள வாவிகடை சூலகாத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 72). விவசாயம் செய்து இவர் எருமை மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வாவிகடை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மாடுகளை ரோட்டை கடந்து மறுபுறம் சென்று மேய்ப்பதற்காக செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கருப்புசாமியின் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்புசாமி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News