பவானி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பலி.
பவானி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னபுலியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). இவர் இன்று பவானியில் உள்ள கனரா வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பவானி விஎன்சி கார்னர் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.