ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) ஞாயிற்றுக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2024-12-07 11:30 GMT
ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) மின்தடை

ஈரோடு மாநகரில் நாளை மின்தடை (பைல் படம்).

  • whatsapp icon

Erode City Power Shutdown :-

பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை (டிச.8) ஞாயிற்றுக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட ஆட்சியர் அலுவலக மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.8) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதனால், ஈரோடு மாநகரின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின்பாதை:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், கம்பர் வீதி, அவ்வையார் வீதி, பாலக்காடு, வீரமாமுனிவர் வீதி,பெருந்துறை சாலை, புதிய டீச்சர்ஸ் காலனி, வி.ஐ.பி., காலனி, பாரதிதாசன் வீதி, ராணா லட்சுமணன் நகர், திரு.வி.க., வீதி, டீச்சர்ஸ் காலனி மற்றும் ஈ.பி.காலனி 1, 2,3 ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News