சென்னிமலை அருகே நீரில் மூழ்கி டிரைவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
சென்னிமலை அருகே வாய்க்காலில் குளித்த டிரைவர் தண்ணிரில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை.;
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). டிரைவர். இவர் அரச்சலூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் அரச்சலூருக்கு வந்த மூர்த்தி சென்னிமலையில் உள்ள எல்.பி.பி வாய்க்காலுக்கு சென்று குளித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மூர்த்தி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க்காலில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சென்னிமலை அருகே உள்ள ஓட்டக்குளம் பகுதியில் உள்ள எல்.பி.பி வாய்க்காலில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்த மூர்த்தி என தெரிய வந்தது. இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.