இணைந்த விரல்களை அறுவை சிகிச்சையால் பிரித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த சிறுமியின் இணைந்த விரல்களை அறுவை சிகிச்சையால் பிரித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.;
அந்தியூரை சேர்ந்த சிறுமியின் இணைந்த விரல்களை அறுவை சிகிச்சையால் பிரித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த கோபிகா (வயது 14) என்ற சிறுமிக்கு 2 கைகளிலும் இருந்த விரல்கள் இணைந்திருந்தன. இதனால் அந்த சிறுமி தன்னுடைய அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சைக்காக சிறுமி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று அரசு மருத்துவமனையிலேயே சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, விரல்களை வெற்றிகரமாக பிரித்து சாதனை படைத்தனர்.
தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். இணைந்த விரல்களுடன் சிரமப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை சிறுமியின் பெற்றோர் பாராட்டினார்கள். சிறுமி கோபிகாவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.