அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கான தற்செயல் தேர்தலில் திமுக வெற்றி

அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டுக்கான தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணன் வெற்றி பெற்றார்.

Update: 2022-07-12 03:30 GMT

அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் கண்ணன்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தற்செயல் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது இதில் திமுக வேட்பாளர் யூ.கே.கண்ணன்  என்பவர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். அம்மாபேட்டை பேரூராட்சி இரண்டாவது வார்டு அதிமுக.., திமுக ., அமமுக  என மும்முனை போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் மொத்த வாக்குகள் 726 கொண்ட இந்த வார்டில் 649 வாக்குகள் பதிவாகி இருந்தது. 

இதையடுத்து திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ராஜேந்திரன் என்பவர் போட்டியிட்டார்.  அமமுக சார்பில் சித்தன் என்பவர் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டிட்ட யூ கே கண்ணன் என்பவர் 406 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 238 வாக்குகளும் அமமுக வேட்பாளர் ஐந்து வாக்குகளும்  பெற்றனர்.

அதிமுக சார்பில் போட்டிட ராஜேந்திரன் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணன் 168 வாக்குகள் வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News